சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!!

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!!

சிங்கப்பூர்:செனட் சபை அடுத்த வாரத்திற்குள் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதரை தேர்வு செய்வதற்கு குழு வாக்கெடுப்பு நடத்த உள்ளது.

இதில் டாக்டர் சின்ஹா சிங்கப்பூருக்கான தூதராக தேர்வு செய்யப்படலாம்.

திரு ட்ரம்ப் அவர்கள் முன்மொழிந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தூதர்களின் நிலையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியினர் தாமதித்து வருகின்றனர்.

தூதர்களை தேர்வு செய்வதற்காக மேற்கொண்ட நடைமுறையை புதிய உத்தியாக ஒவ்வொருவரையும் தனித்தனியாக நியமிப்பதற்கு பதிலாக ஒரு குழுவாக நியமித்து நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று திரு ட்ரம்ப் நிர்வாகமானது இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

இதனை அடுத்து இந்த மாத இறுதிக்குள் தேங்கி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் அதிகமான நியமனங்கள் உறுதி செய்யப்படும்.

டாக்டர் சின்ஹாவின் நியமனம் குறித்த விவகாரம் செனட் சபையில் உள்ள வெளியுறவு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளதாக நாடாளுமன்றம் ஆனது (09/09/2025) கூறியுள்ளது.

முதல் தொகுதியில் 48 நியமனங்கள் உறுதி செய்யப்படும். இந்த பட்டியலில் டாக்டர் சின்ஹாவின் பெயர் இடம்பெறவில்லை.

ஜூலை 9- ஆம் தேதி டாக்டர் சின்ஹாவுடன் நடைபெற்ற விவாதம் சற்று முனைப்புடன் முடிந்தது. ஜனநாயக கட்சியினர் கேட்ட நியமனத்தை தாமதப்படுத்தியது.

இந்த விவாதத்தின் போது டாக்டர் சின்கா மீண்டும் விசாரணை குழுவுக்கு முன் வரவேண்டிய அவசியம் இல்லை என்று செனட் சபையானது கூறியிருந்தது.

இது சாதாரண நடைமுறை எனவும் குழு இவரது நியமனத்திற்கு மீண்டும் வாக்களிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி நடைபெற உள்ள குழுவின் கூட்டத்தில் முன்மொழியப்படும் 32 நபர்களின் பெயர் பட்டியலில் டாக்டர் சின்காவின் பெயர் இணைந்துள்ளது.

செனட் சபையில் வாக்கெடுப்பிற்காக நபர்களின் பட்டியலில் உள்ள நபர்கள் முன்மொழியப்படுவார்கள்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan