இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை 7:41 மணி அளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் 9 சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலை ஏறுபவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடிப்பில் சிக்கி உள்ள 20 பேரை மீட்பதற்கான ப் பணிகளை இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா துகோனோ மலை வெடித்ததில் 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மேகங்கள் காற்றில் பரவியுள்ளது.

இந்தோனேஷியா எரிமலை மற்றும் புவியியல் இடர் தணிப்பு அமைப்பு எரிமலையின் எச்சரிக்கை நிலை மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தில் நீடிப்பதாக எச்சரித்துள்ளது.

எரிமலை வெடிப்பில் சிக்கியுள்ள 20 மலையேறுபவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக காவல்துறை உட்பட பல டஜன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிக்கியவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள். மீதமுள்ளவர்கள் இந்தோனேசியர்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

எரிமலை வாய் பகுதியில் இருந்த 4 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மழை பெய்வதால் மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்தோனேஷியா எரிமலை மற்றும் புவியியல் இடர் தணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில மலை ஏற்பவர்கள் காயமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பல்வேறு தளங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, 2 சிங்கப்பூரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், மீட்பு குழுவினர் அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் தற்போது வரை எந்த ஒரு விமானங்களும் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK