புக்கிட் பாஞ்சாங் கார் நிறுத்துமிடத்தில் பரபரப்பு…!!

புக்கிட் பாஞ்சாங் கார் நிறுத்துமிடத்தில் பரபரப்பு...!!

சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று(04.01.26) அதிகாலை மினிவேன் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ விபத்து நேரத்தில் பல முறை வெடிச்சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீப்பிடித்த வாகனத்தின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களும் தீயின் தாக்கத்தால் சேதமடைந்தன.

SGRV FRONT MAN என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த சம்பவம் நேற்று (04.01.26) அதிகாலை 4 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோடு, பிளாக் 533A-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது.

அங்கு இருந்தவர்கள் மூன்று அல்லது நான்கு முறை பலத்த வெடிச்சத்தங்களை கேட்டதாகவும், சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்பு வாகனங்களின் சைரன் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த வாகனம் டொயோட்டா SUV என கூறப்படுகிறது. புகைப்படங்களில், அந்த வாகனத்தின் எஞ்சின் பகுதி கடுமையாக எரிந்து சிதைந்திருப்பது தெரிகிறது.

அந்த SUV வாகனம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு BYD மின்சார கார் மற்றும் ஒரு நிசான் டிரக்கும் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, நிசான் டிரக்கின் வலது பக்கம் கருகி எரிந்துள்ளது.

நேற்று(04.01.26) அதிகாலை 4:05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை, உறுதிப்படுத்தியது.

தீயை அணைக்க தீயணைப்புக் குழாய்கள் மற்றும் இரண்டு அழுத்தப்பட்ட காற்று நுரை தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. அதிக வெப்பநிலை மற்றும் புகை காரணமாக அருகிலிருந்த இரண்டு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK