தேசத்தை நிறுவிய மூத்த அமைச்சரின் 11 ஆவது நினைவு நாள்..!!
சிங்கப்பூர்: நேற்று (மார்ச் 23) தேசத்தை நிறுவிய மூத்த அமைச்சர் லீ குவான் யூ அவர்களின் மறைவின் 11-வது ஆண்டு நினைவு நாள் நினைவு கூறும் வகையில் லீ சியன் லூங் செய்தியை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மார்ச் 22ஆம் தேதி தாவரவியல் பூங்காவில் முழுமையாக பூத்திருந்த “அரண்டா லீ குவான் யூ” ஆர்கிட் மலரை கண்ட மூத்த அமைச்சர் லீ அவர்கள் முகநூலில் பிற்பகல் இதை பகிர்ந்து உள்ளார்.
லீ குவான் மறைவிற்குப் பிறகு இந்த உலகம் மிகப்பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது எனவும் எங்கேயும் மோதலும் நிச்சயமற்ற தன்மையும் நிலவி வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் நமது முன்னோர்களின் ஒற்றுமை, ஞானம் மற்றும் உறுதிப்பாடும் அவர்கள் இட்ட அடித்தளத்தின் மீது நாம் அடைந்த வளர்ச்சியுமே நம்முடைய தேசத்திற்கு ஒரு வலிமை ஆதாரமாக திகழ்கிறது. இது நம் தேசத்தின் எதிர்கால சவால்களை கடந்து செல்லவும் வழி வகுக்கும்