இந்த ஆண்டின் இறுதிக்குள் 15,000 புதிய வீடுகள்! யாருக்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 15,000 புதிய வீடுகள்! யாருக்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தெங்கா வட்டாரத்தில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட 30 ஆயிரம் வீடுகளில் கிட்டத்தட்ட 12,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர்
சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

வீட்டு அமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சமூக தினமான ஜூலை 26 அமைச்சர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டமிட்டது போல் ஏறத்தாழ 15000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றார் அவர்.

மேலும் புதிய குடியிருப்பு பேட்டை அமைக்கும் போது அந்த வட்டாரத்தில் உள்ள சமூகத் தலைவர்கள் அடித்தள ஆலோசகர்கள் ஆகியோருடன் கலந்து பேசப்படும் அவர்கள் வட்டார மக்களின் கருத்துக்களை தருவார்கள் அதன்படி குடியிருப்பு பேட்டையில் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார்.

இதன் மூலமாக குடியிருப்பாரர்கள் குடியிருப்பு பேட்டைகளில் வரும் வசதிகளை பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வார்கள் என்றார் அமைச்சர்.

குடியிருப்பு பேட்டைகளை கட்டும் போது மக்களிடம் கருத்து கேட்பது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது அதனால் எதிர்காலத்திலும் புதிய பேட்டைகளை உருவாக்கும் போது இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

2019 ஆம் ஆண்டு தெங்கா வட்டாரத்தில் வீடு வாங்கிய 6500-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டன அது போல் 13 ஆயிரம் தெங்கா குடி இருப்பாளர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர்.

தெங்கா வட்டாரத்தில் போக்குவரத்து வகைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்ற அமைச்சர் உறுதி அளித்தார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan