சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..??

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் மீது நாளை (02.02.26) முதல் வழக்குத் தொடரப்பட உள்ளது. 16 முதல் 51 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள், மொத்தம் S$3.1 மில்லியனுக்கு அல் மேல் தொடர்புடைய மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் காவல்துறையின் தகவலின்படி, மோசடி சம்பவங்களில் 16 ஆண்களும் 8 பெண்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், ஆட்சேர்ப்பு மோசடி, மின் வணிகம், முதலீடு, ஆன்லைன் காதல் மற்றும் பாலியல் சேவை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையில், வங்கிக் கணக்குகளை விற்றல் அல்லது ஒப்படைத்தல், மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெ மாற்ற பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் வசூலித்தல் போன்ற வழிகளில் குற்றவியல் குழுக்களுக்கு உதவியதாக தெரிய வந்துள்ளது. சிலர் ஆன்லைன் வங்கி உள்நுழைவுத் தகவல்களை வெளிப்படுத்தியதாகவும், சிலர் சிங்பாஸ் தகவல்களை தவறாக பயன்படுத்த அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், பண வெகுமதிக்காக மொபைல் போன் சிம் கார்டுகளை பதிவு செய்து மோசடி கும்பல்களுக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.

மோசடி தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இத்தகைய குற்றங்களில் தொடர்புடையவர்கள் வங்கிச் சேவைகள் மற்றும் மொபைல் போன் சேவைகளைப் பயன்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK