ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!!

ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!!

காஷ்மீரில் போதைப்பொருள் இல்லாத “ஜம்மு காஷ்மீர் அபியான்” என்ற திட்டமானது கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டமானது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்ட தொடங்கப்பட்ட திட்டமாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் போதைப் பருள் கடத்தலை தடுப்பதற்காக உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கை மூலமாக இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான ஆறு அசையும் சொத்துகளும் ரூ.7.77 கோடி மதிப்பிலான 14 அசையா சொத்துகளும் இது மூலமாக முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு மண்டலத்தில் ரூ.1.36 கோடி மதிப்பில் ஆன 22 அசையும் சொத்துகளும் ரூ.5.54 கோடி மதிப்பில் ஆன ஒன்பது அசையா சொத்துகளும் இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 537 கடத்தல் காரர்கள் மீது 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் அளித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK