ICA & MOM - இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!!
சிங்கப்பூரில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும்(ICA) மனிதவள அமைச்சகமும்(MOM) இணைந்து திடீர் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நேற்று (ஏப்ரல் 10) ICA & MOM சேர்ந்து அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது, நேபாள நாட்டினர் பிடிபட்டனர்.
இது குறித்த விரிவான தகவலை இன்று (ஏப்ரல் 11) ICA அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மார்ச் 16 முதல் ஏப்ரல் ஆறு வரை நடத்தப்பட்ட சோதனையின் போது ஆறு நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் 24 முதல் 47 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
ஏப்ரல் 10 நேற்று நடத்திய சோதனையின் போது 11 நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் நாட்டில் தங்குவதற்கான விசா காலம் முடிந்திருந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் அவர்களது வருகை அனுமதி சீட்டு காலம் முடிந்தும் குடி வரவு சட்டங்களை மீறி தங்கிய காரணத்திற்காகவும் மேலும் இவர்களுக்கு யாரேனும் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தார்களா அல்லது சட்ட விரோதமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை கண்டறிய அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசா காலம் முடிந்தும் சிங்கப்பூரில் தங்கி இருப்பது ஒரு கடுமையான குற்றமாகும் இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை குறைந்தபட்சமாக மூன்று பிரம்படிகள் அல்லது $6,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
குடிவரவு சட்டங்களை மீறுபவர்கள் அவர்களது தண்டனை காலத்தை அனுபவித்த பிறகு அல்லது அபராதம் செலுத்திய பிறகும் நாடு கடத்தப்படுவார்கள் மற்றும் மறுபடியும் சிங்கப்பூருக்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.
குடிவரவு சட்டங்களை மீறுபவர்களை வேளையில் சனியில் அமர்ந்துவது அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பானால் செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விசா காலம் முடிந்தும் தங்கி இருக்கும் அல்லது சட்ட விரோதமாக வேலையில் அமர்த்திய காரணத்திற்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அதனுடன் $6000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் http://g.sg/icafeedbackio என்ற இணையதளம் மூலம் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க முடியும்.
தேசிய எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சிங்கப்பூரில் குடியேற்ற விதிமீறல்களை திறம்பட நிர்வகிப்பதற்காகவும் ICA நாட்டிற்குள் அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என கூறியுள்ளது.