காபிக் கடையில் உதவியாளராக “சு” என்ற 22 வயதுடைய பெண் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது அந்த முதியவர், “நீ இங்கு இருக்கிறாயா” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண், “ஆம் நான் இங்கு இருக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.
அதன் பிறகு அந்த முதியவர் அந்தப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து காபிக் கடையில் இருந்து வெளியே இழுத்தார் என்று அந்தப் பெண் கடையின் முதலாளியிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் ஆனது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த 71 வயது முதியவரை மனநல சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
முதியவரை கைது செய்ய முயற்சிக்கும்போது அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தன்னுடைய உயிருக்கோ அல்லது மற்றவர்களின் உயிருக்கோ ஆபத்தாக யாரேனும் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கருதினால் அவர்களை மனநல சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.
இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது ஸ்டோம்ப் என்ற தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.அந்த காணொளியில் காவல்துறையினர் கைது செய்ய முற்படும்போது அந்த முதியவர் அவர்களை எதிர்த்துப் போராடியது தெரிகிறது.
அந்த முதியவர் அதிகாரிகள் தன்னை அடித்ததாகவும் பணத்தைத் திருடியதாகவும் ஹோக்கியன் மற்றும் மாண்டரின் மொழிகளில் கத்தியுள்ளார். ஆனால் முதியவர் சொன்னது போன்று எந்ததொரு நிகழ்வும் அந்த காணொளியில் பதிவாகவில்லை.