வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய உதவி மேலாளர்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணிப்பெண் முகவை நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றிய 45 வயது சாய் சொங் லின், வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் $92,000 ரொக்கத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றத்திற்காக இவர் மீது நேற்று(05.01.26)20 மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசியாவை சேர்ந்த சாய், தனது தனிப்பட்ட ‘பேநவ்’ வங்கி கணக்கை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்காக காட்டி, சேவைக்கான கட்டணங்களை அதில் செலுத்துமாறு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022 ஜூன் முதல் 2025 மார்ச் வரை ‘ஃபர்ஸ்ட் ஆல்பெஸ்ட் ஹியூமன் ரிசோர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அவர், ஐந்து மாத காலத்தில் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முறைகளில் கூடுதல் கவனம் தேவை என்பதையும், நிறுவனங்களின் உள் கண்காணிப்பு முக்கியத்துவத்தையும் மீண்டும் எடுத்துக் காட்டுகிறது.