கோடரியால் பெண்ணை தாக்கிய இந்திய இளைஞர்..!!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:இந்தோனேசியப் பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக 30 வயது இந்திய ஆடவர் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
நேற்று முன்தினம் (11.02.26) காலை சுமார் 7.05 மணியளவில் 11, Sims View பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் அவசர உதவி குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஐயப்பன் இந்தோனேசியாவைச் சேர்ந்த 30 வயது ஃபாஜார் நூர் அய்னி என்பவரை பலமுறை கோடரியால் தாக்கியதாக சந்தேகிக்கப்படுகிறார். அவரின் கடுமையான தாக்குதலால் பெண்ணின் தலையில், கழுத்தில் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்த நூர் அய்னி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருவரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான பன்னீர்செல்வம் அடுத்த வெள்ளிக்கிழமை (20.02.26) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவர்மீது சுமத்தப்பட்டுள்ள கொலை முயற்சி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனையுடன் பிரம்படிகள் விதிக்கப்படலாம் என சட்டப்பிரிவுகள் தெரிவிக்கின்றன.