சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!!
சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் பல இணையச் சேவைகள் முடங்கியக் காரணத்தினால் அந்த சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சிங்டெல், ஸ்டார்ஹ .ப் மற்றும் ஃபர்ஸ்ட் டெலிகிராம் உள்ளிட்ட பல உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்று (ஏப்ரல் 18) காலை பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் செயல் இழப்பு குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.
இன்று (ஏப்ரல் 18) காலை 10:40 மணி அளவில் பல்வேறு வகையான தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து சேவைத் தடைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதாக டவுன்டிடெக்டர் (Down Detector) என்ற நெட்வொர்க் கண்காணிப்பு நிலையம் தகவல் அளித்துள்ளது.
சிங்கிடெல், ஸ்டார்ஹப், ஃபர்ஸ்ட், சிம்பா, மைரிபப்ளிக், வியூக வெஸ்ட் மற்றும் சிங்க்டெல்லின் கோமோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த இணைய சேவை சிக்கல்களை எதிர்கொண்டன.
வாடிக்கையாளர்கள் பிராண்ட்பேண்ட் சேவைத் தடைகளை எதிர்கொள்வது தங்களுக்கு தெரியும் என்று சிம்க்டெல் நிறுவனம் தனது facebook பக்கத்தில் இன்று (ஏப்ரல் 18) காலை 11:45 மணி அளவில் பதிவிட்டிருந்தது.
தளத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் அனைத்து பணியாளர்களும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்களது பொறியாளர்கள் இந்த விஷயம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும், கூடிய விரைவில் இது குறித்த தகவல்களை நாங்கள் வழங்குவோம் என்றும் சிங்க்டெல் அந்த முகநூல் பதிவில் கூறியுள்ளது.