“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!!

"சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026" இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!!

சிங்கப்பூரில் 74% உள்ளூர் வாசிகள் தங்கள் சமூகப் பொது இடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தூய்மையாக இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இதற்கு காரணம் அரசாங்கமும், துப்புரவு பணியாளர்களும் என்று கூறியுள்ளனர்.

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” என்ற இயக்கத்தின் பிரச்சாரமானது நேற்று (ஏப்ரல் 19) தொடங்கப்பட்டது.

தூய்மையானச் சூழலைப் பராமரிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், 16 வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மன்றம் கேபிடாலேண்டுடன் ஓராண்டு கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இது அரசாங்கத்தின் “முதலில் நாம் ” என்ற சமூக முன் முயற்சியுடன் ஒத்துப் போகிறது.

இந்த வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் இந்த மாதங்கள் (ஏப்ரல்) முதல் ஆண்டு (2026)இறுதி வரை இதற்கென சிறப்பாக தயாரிக்கப்பட்டக் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

அவை அடிப்படை நன்னடத்தையை ஊக்குவிப்பதோடும், உணவு மற்றும் பானப் பொட்டலங்களை எவ்வாறு கையாள்வது, அப்புறப்படுத்துவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு கற்பிக்கும் வகையில் அமைய உள்ளது.

மன்றம் ஜூன் மாதம் மூன்று வணிக வளாகங்களில் நடமாடும் கண்காட்சிகளையும் நடத்த உள்ளது. சிங்கப்பூர் தூய்மைத் தினத்தை முன்னிட்டு மன்றம் நேற்று (ஏப்ரல் 19) நாடு முழுவதும் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் குப்பையை அகற்றும் பணிகளில் ஈடுபட்டது.

சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் பிரச்சாரத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்சுற்றுப்புறச் சூழலை வைத்திருக்க, 20 சமூக பங்காளிகள் தொடர் ஓட்ட வடிவில் 15 இடங்களில் செயல்பாடுகளை நடத்தும் ஒரு தூய்மை தொடர் நிகழ்வை மன்றம் தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரமானது மே 14ஆம் தேதி வரை அதாவது ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்று மன்றம் கூறியுள்ளது.

சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருக்க அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரச்சாரத்தை தலைமை தாங்கியத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தூய்மை என்பது ஒரு கடமையை மட்டும் அல்ல; அது ஒரு மனநிலையாகவும் இருக்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் உரையாற்றியுள்ளார்.

 

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK