புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூர் : கடந்த சில நாட்களாக கெய்லாங் சாலையானது புகைப்படக் கலைஞர்களால்(Photographers) ஈர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சூரிய உதயம் ஆகும்.
விடியற்காலையில் தோன்றும் கண் கவர் சூரிய உதயங்களால் உள்ளூர் வாகனம் ஜொலிப்பது போன்று காணப்படுகிறது. இந்த அற்புதமான காட்சியைப் படம் பிடிப்பதற்காக புகைப்படக் கலைஞர்கள் கெய்லாங் பகுதிக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
புகைப்பட கலைஞரான சாய் ஜர்ன் வெய், “CloudSpotting & SkySotting Singapore” என்ற facebook குழுவில் கெய்லாங் சாலையில் அவர் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 16 ) மற்றும் வார இறுதியில் காலை 6:30 மணிக்கு கெய்லாங் சாலையில் உள்ள ஒரு பிரபலமான பாதசாரிகள் மேம்பாலத்திற்கு அவர் சென்றபோது சூரிய உதயம் கெய்லாங் சாலையின் மையத்துடன் சரியான நேர்கோட்டில் வரும் அந்த தருணத்தைப் படம் பிடிப்பதற்காக, 20- க்கம் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் டெலிஃபோட்டோ லென்ஸ்களுடன் அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்ததாக சாய் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக பல நாட்கள் சூரியன் உதிக்கும் போது இந்த நிகழ்வானது நடந்துள்ளதாகவும், அது ஒரு கண்கொள்ளக் காட்சியாக இருந்ததாகவும் சாய் ஜர்ன் தெரிவித்துள்ளார்.
மற்ற இணையவாசிகளும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்து வருகின்றனர். தெருக்களில் பளபளக்கும் இதமான சூரிய ஒளி மற்றும் நிழல் கோடுகளை உருவாக்குவதை அந்த காணொளிகளில் காண முடிகிறது.
அலெக்ஸ்ஜிமோமென்ட்ஸ் என்ற இனவாசி தான் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தலைக்கு மேலே விமானங்கள் பறக்க, சூரியன் ஒரு நெருப்பு வந்து போல மெதுவாக உதிப்பது போன்று காட்டி இருந்தார்.
அந்த காணொளியானது 3400 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் (Likes) 1200க்கும் மேற்பட்ட பகிர்வுகளையும் (Share) பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சில குறுகிய நாட்களுக்கு சூரிய உதயமும் நகரத்தின் வானுயரக் காட்சியும், சரியாக ஒன்றிணைந்து ஒரு ஓவியம் போன்ற காட்சி உருவாக்குகின்றது. நகரம் முழுவதும் மெதுவாக விழித்தெழுவது போல சூரியன் மெதுவாக உதிக்கிறது. சிங்கப்பூர் சலிப்பூட்டும் இடமென்று யார் சொன்னது? அதன் அழகை நம்மால் கண்டறிய முடியுமா? என்ற கேள்வியுடன் அந்த காணொளியை வர்ணித்துத்து பதிவிட்டுள்ளார்.