MCE சுரங்கப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் இன்று காலை (ஏப்ரல் 27) அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி செல்லும் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (MCE) உள்ள மெரினா கோஸ்டல் டிரைவ் வெளியேறும் வழிக்கு அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு லாரியின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 27) காலை ஜெர்மி சீ என்ற இணையவாசி ஒருவர் Facebook பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில் சுரங்கப் பாதை முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்து இருப்பதும், நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி தீப்பிடித்து எரிவது போல தெரிவதும் காணப்படுகிறது.
அதனால் வாகனங்களுடன் உடனடியாக வெளியேற வேண்டும் என்று சாலைக்கும் வெளியேஒரு அறிவுப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் கூறியதாவது: இன்று (ஏப்ரல் 27) காலை 6.55 மணி அளவில் இந்த தீ விபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், இந்த விபத்து ஒரு லாரியின் பின்பக்க டயரில் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
லாரியில் ஏற்பட்ட தீயை SCDF வீரர்கள் நீர்த்திரைப் பீரங்கிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என SCDF உறுதி செய்துள்ளனர்.
இந்த தீ விபத்தின் காரணம் இன்னும் காவல்துறையினரின் விசாரணையில் உள்ளது.