சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் 23 வயதான ஜெர்மைன் லிம் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

சட்டவிரோதமாக ராணுவ தோட்டாக்களை வைத்திருந்ததற்காகவும், 3D பிரிண்டிங் மூலம் துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு நேற்று (மே 8) 4 மாத சிறை தண்டனையும், $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட பெண் துப்பாக்கிகளைப் பொருத்தும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் ராணுவ பொருட்களின் மீது ஆர்வம் கொண்ட ஒரு நண்பரிடம் இருந்து $20 -க்கு 5.56 மிமீ தோட்டா ஒன்றை வாங்கி உரிமம் இல்லாமல் அவரது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இந்த வகை தோட்டாக்கள் சிங்கப்பூர் ஆயுதப்படைகளால் பயன்படுத்தக்கூடிய வெடி மருந்து வகைகளில் ஒன்று என கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொரு நபரான ஜேவியர் டானை தேவாலயத்தின் மூலம் சந்தித்ததாகவும் ராணுவ பொருள்களில் இருவருக்கும் இருந்த பொதுவான ஆர்வத்தின் காரணமாக அவர்கள் அறிமுகமானதும் தெரியவந்துள்ளது.

ஜேவிர் டான் என்பவர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ரிபப்ளிக் பாலிடெக்னிக் பள்ளியில் பயின்றுள்ளார். தனது வகுப்பு தோழர் ஒருவரிடம் இருந்து வெடி மருந்துகளையும் பெற்றுள்ளார். அவர் ஜனவரி 2025 ஆம் ஆண்டு அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார்.

ஜெர்மைன் லிம் வெடி மருந்துகளை வைத்திருப்பதற்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கபட்டு, 3 மாத சிறை தண்டனையும், $1,000 அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது தோட்டாக்கள் த ஒரு 3d பிரிண்டர் மற்றும் அது தொடர்பான பொருட்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் அந்த தோட்டாக்களின் மூலத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்தத் தோட்டாக்களை வழங்கிய ஜேவியர் டானும் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் வைத்திருந்த ஆயுதம் கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மிகவும் ஆபத்தான இயந்திர துப்பாக்கி அன்று அரசு தரப்பு சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் ஜெர்மைன் லிம் இதற்கு முன்னால் 2022 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு குற்றத்திற்காக தண்டையைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK