சிங்கப்பூரில் HDB குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூர்: உட்லண்ட்ஸில் உள்ள ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் நேற்று (ஜூன் 5) மதியம் உட்குரோவ் பிளாக் 514 இல் உள்ள லிப்ட் லாபியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் பகுதிக்கு பொறுப்பான மார்சிலிங்-யு டீ GRC நாடாளுமன்ற உறுப்பினர் சூ வால் மான் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் இந்த சம்பவத்தால் பொதுப்பகுதிகளில் உள்ள விளக்கு அமைப்பு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தற்போது பாதியளவு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் இன்னும் ஒரு விளக்கு பழுது பார்க்கும் பணியில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் HDB குடியிருப்பில் உள்ள மின்தூக்கி சேவை பாதிக்கப்படாமல் சாதாரணமாக இயங்கி வருவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

மார்சிலிங்-யு டீ நகர மன்றம் தற்போது பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து வருகிறது.

அவ்வாறு செய்வது பாதுகாப்பானது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டதும் தேவையான பழுது பார்ப்புப் பணிகளைத் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

கைவிடப்பட்ட பெரிய பொருட்கள் அல்லது தீ விபத்து அபாயங்கள் குறித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவும், உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அது உதவும் என்று சூ கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK