கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!!

உலக கிண்ண கால்பந்து 2026 இல் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது ஆறு உலகக் கிண்ணங்களில் கோள் அடித்த முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ரொனால்டோ சாதனை படைத்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் கையில் ஒலிப்பதிவு கருவியுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த விளையாட்டு நிழற்பட கலைஞர் எட்மெண்ட் வோங்கும் தமது கனவை நனவாக்கி கொண்டிருந்தார்.

ரொனால்டோவை வைத்த கண் வாங்காமல் தொடர்ந்து நிழற்படக் கலைஞர் அவரை கண்காணித்துக் கொண்டிருந்தார். இந்த ஆண்டு உலக கிண்ணத்தில் முதல் கோல் போட்ட தருணத்தையும் அதனை தொடர்ந்து அவர் அணியின் சக வீரர்களை நோக்கி ஓடிச் சென்று ஆற தழுவி கொண்டாடிய துடிப்பான காட்சியையும் மிகத்துல்லியமாக படம் பிடித்துள்ளார்.

ரொனால்டோவை அவருடைய அணியினர் கட்டிப்பிடித்துக் கொண்டாடுவதும் போர்ச்சுக்கல் அணியின் சிறப்புநிற சீருடைக்க நடுவே ரொனால்டோவின் மகிழ்ச்சியான முகம் ஒளி வீசுவதும் அண்ட் நிழற்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த புதிய சாதனையை நிகழ்த்த ரொனால்டோவிற்கு 24 ஆட்டங்களும் கிட்டத்தட்ட 2000 நிமிடங்களும் தேவைப்பட்டிருக்கின்றன.

“இது ஒரு சிறந்த கதையை சொல்கிறது என்றார்” அனைத்து உலக கால்பந்து சம்மேளனத்தின்(FIFA) அங்கீகாரம் பெற்றவரான திரு வோங்.

சக வீரர்களின் ஆதரவையும் அவர்கள் ரொனால்டோ மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அந்த நிழற்படம் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK