KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது.

ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அந்த PMD சாதனத்தில் இருவர் தலைக்கவசம் ஏதும் அணியாமல் வேகமாக பயணித்துள்ளனர்.

அவர்கள் KPE சுரங்கப்பாதையின் வழியாக சென்று ஏர்போர்ட் ரோடு வெளியேறும் பகுதிக்கு அருகில் சென்றபோது, அங்கிருந்த வேக கண்காணிப்புக் (Speed Camera)கேமரா மின்னி பாய்ந்தது.

அந்த அதிவேக சாதனத்தில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிவு எண் பலகையும் இல்லை என்று வீடியோவைப் பகிர்ந்த வாகன ஓட்டி தெரிவித்துள்ளார்.

KPE சுரங்கப் பாதையின் பொதுவாக வேகவரம்பு மணிக்கு 80 km ஆகும். ஆனால் இந்த சாதனம் அங்கிருந்த கார்களை விட அதிவேகமாக சென்றதால் இதன் வேகம் 80 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிங்கப்பூரில் PMD போன்ற மின் – இலுவை வண்டிகளை விரைவுச் சாலைகளிலோ அல்லது பொது சாலைகளிலோ ஓட்டுவது முற்றிலும் சட்ட விரோதமானது.

அந்த வகை வண்டிகள் மிதிவண்டி பாதைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.அவற்றின் அதிவேக வரம்பு மணிக்கு 25 கிலோமீட்டர் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த விதியை மீறி சாலைகளில் PMD ஓட்டுபவர்களுக்கு $2000 வரை அபராதம், 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் அந்த சாதனமும் பறிமுதல் செய்யப்படும்.

இந்த விதிமுறை குறித்து சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.