சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!!

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த 'ஸோம்பி வேப்' பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!!

சிங்கப்பூருக்குள் மின்னணு சிகரெட்டைகளைக் கடத்தியதாகவும் தனது வீட்டில் ஸோம்பி போதைப்பொருள் எனப்படும் எட்டோமிடேட் கலந்த மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களை (Kpods) விநியோகத்திற்காக வைத்திருந்ததாகவும் 43 வயது சிங்கப்பூர் நபரான கெவின் ங் ஜியாரென் மிது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளால் கெவின் ங் மறிக்கப்பட்டு அவரிடமிருந்து 29 மின்னணு சிகரெட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) கெவின் வீட்டில் நடத்திய சோதனையில் மேலும் 228 மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

 

சோதனைக் கூட ஆய்வில் அந்த பெட்டிகளில் ஸோம்பி புகைப் பிடிப்பான் என்று அழைக்கப்படும் மனிதர்களை நிலைத்தடுமாறச் செய்யும் ஆபத்தான எட்டோமிடேட் என்ற மனோவசிய மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வகை சாதனங்கள் உள்ளூர் சந்தையில் கட்டவிரோதமாக விநியோகம் செய்ய கொண்டுவரப்பட்டவை ஆகும்.

 

ஜூலை 9-ஆம் தேதி அன்று கெவின் மீது நீதி மன்றத்தில் அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு வாரம் அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிங்கப்பூரில் புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், எட்டோமிடேட் போன்ற ஆபத்தான நச்சுப் பொருட்களைக் கடத்துபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 15 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதன் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 பிரம்படிகளும் விதிக்கப்படும். விதியை மீறுபவர்களுக்கு $2000 வரை அபராதமும் மிதிக்கப்படலாம்.