மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்!

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்!

அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அவர் கழிவறைக்குச் சென்று திரும்பி வருவதற்குள் அவரின் பாஸ்போர்ட் மற்றும் அனைத்து உடைமைகளுடனும் பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து கிளம்பிவிட்டது.

அவர் பேருந்து நிறுவனத்தை எவ்வளவோ தொடர்புக் கொள்ள முயன்றும் அவர்களின் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இதனால் வேறு வழியின்றி அவர் தனியாக ஒரு வாடகை காரைப் பிடித்து தனது தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மறுநாள் அவரது நண்பர் மூலம் பேருந்தில் இருந்த அவரது உடைமைகளை அவர் மீட்டு உள்ளார்.

இரவு 11 மணிக்கு கிளம்ப வேண்டிய பேருந்து கடைசி நேரத்தில் 10 மணிக்கு மாற்றப்பட்டதாக கூறிய அவரை அவசரமாக வரவழைத்ததாகவும், மேலும் பேருந்துக்குள் கரையான்கள், கரப்பான் பூச்சிகள் இருந்ததாகவும் அதன் சுகாதாரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த இந்த மோசமான அனுபவத்தையும், மன உளைச்சலையும் தனது Instagram பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.