சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு Food Poison..!! Gourmetz நிறுவனத்தின் மீது 6 குற்றச்சாட்டுகள்!

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு Food Poison..!! Gourmetz நிறுவனத்தின் மீது 6 குற்றச்சாட்டுகள்!

சிங்கப்பூர்: ரிவர் வேலி தொடக்கப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 60 மாணவர்களுக்கு இரைப்பை குடல் வளர்ச்சி மற்றும் நச்சுணவு (Food Poison) பாதிப்பு ஏற்படக் காரணமான கௌர்மெட்ஸ் (Gourmetz) உணவு விநியோக நிறுவனத்தின் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் (Sale of Food Act) கீழ் லஞ்ச ஊழல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் ஜூலை 29 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி அன்று ரிவர் வேலி தொடக்கப் பள்ளியின் மத்திய சமையலறை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 60 மாணவர்களுக்கு அடுத்த நாளே வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நச்சுணவு அறிகுறிகள் தோன்றியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் சில நாட்களில் இந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து பள்ளிக்க திரும்பினர். யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) நடத்திய ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின் படி  Gourmetz  நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி அன்று இந்நிறுவனம் தயாரித்த சிக்கன் ரைஸ் மற்றும் கார்லிக் ஃபிரைடு ரைஸ் உணவுகளில் நச்சுணவை ஏற்படுத்தும் ‘பேசிலஸ் சீரியஸ்’ (Bacillus Cereus) என்ற பாக்டீரியா அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இறைச்சி குளிர்சாதன அறையில் அசுத்தமான ட்ராலிகள் மற்றும் பிளாஸ்டிக் தட்டுகளில் கோழி இறைச்சி வைத்திருந்தது, சாஸ்களை அழுக்கடைந்த கொள்கலனில் சேமித்திருந்தது போன்றவற்றையும் கண்டறியப்பட்டது.

ஜனவரி 28ஆம் தேதி அன்று விநியோகிக்கப்பட்ட பென்டோ (Bento) உணவுப் பொட்டலங்களில் காலை 6:48 மணிக்கு பேக் செய்யப்பட்ட உணவை,  ’08:30 மணிக்கு தயாரானது’ என தவறான நேர முத்திரையிட்டு விற்பனை செய்ததும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது..

இந்த குற்றச்சாட்டுகள் பதியப்பட்ட போதிலும், மாணவர்களின் உணவு விநியோகம் தடைபடக்கூடாது என்பதற்காக கல்வி அமைச்சகம் (MOE) நிறுவனத்தின் சேவையை தற்காலிகமாக தொடர அனுமதித்துள்ளது.

எனினும் Gourmetz நிறுவனத்தின் சமையல் செயல்பாடுகள் ஜூன் 15 முதல் பெரிய மற்றும் மேம்பட்ட ஒரு மத்திய சமையலறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளிகள் அதன் மீதான கண்காணிப்பை உன்னிப்பாக அதிகரித்துள்ளன.

இந்த வழக்கின் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று நடைபெறஉள்ளது.