பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

சிங்கப்பூர்: பான் ஜலண்ட் விரைவுச்சாலையில்(PIE) நடந்த கொடூர விபத்தில், 58 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6:30 மணியளவில், சாங்கி நோக்கி செல்லும் பான் ஐலண்ட் விரைவுச்சாலையில், ஜாலான் ஏகோப்(Jalan Eunos)வெளியேறும் வழிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதிக்கொண்டான. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF)மருத்துவர்கள், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்

தீவிர பரிசோதனைக்குப் பிறகு அந்த 58வயது நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், விபத்துக்குக் காரணமான 42 வயதுடைய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் மோட்டார் சைக்கிள் சாலையில் தூக்கி வீசப்பட்டு, அதன் பாகங்கள் சிதறிக் கிடந்தன. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து உடனடியாக முடக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த பகுதி சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் முக்கியப் பாதை என்பதால் மாலை நேர அலுவலகப் பணி முடிந்து விடு திரும்புவோரில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

விரைவுச்சாலைகளில் லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள், தங்களுக்கு அருகில் வரும் இருசக்கர வாகனங்களை கவனமாகப் பார்த்து, போதிய இடைவெளியுடன் செல்ல வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள லாரி ஓட்டுநரின் வாகனத்தில் இருந்த கேமரா பதிவுகள் மற்றும் விரைவுச் சாலையின் (CCTV) காட்சிகளைப் பெற்று காவல்துறையினர் விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.