சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செவிலியர் சுகாதாரப் பராமரிப்புத் தொழிலின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நர்சிங் துறை மூன்று புதிய முதுகலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டங்கள் சமூக சுகாதாரம், தீவிர சிகிச்சை மற்றும் தொற்று கட்டுப்பாடு ஆகிய துறைகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் திறன்களை செவிலியர்களுக்கு வழங்கும்.
புதிய முதுகலை திட்டங்களில் சமூக சுகாதாரத்தில் முதுகலை, தீவிர சிகிச்சை நர்சிங்கில் முதுகலை அறிவியல் மற்றும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் முதுகலை அறிவியல் போன்றவை அடங்கும்.
இந்த திட்டங்களில் சேரும் செவிலியர்கள் ஸ்டேக்கிங் மற்றும் பகுதி நேர வேலை-படிப்பு மாதிரியில் படித்து முடிக்கலாம்.
கல்விக் கட்டணத்திற்காக SkillsFuture பயிற்சி மானியங்களை பயன்படுத்தலாம்.
மேலும், பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் இந்தக் காலத்தில் தங்களது வேலையை தொடர அனுமதிக்கப்படுவார்கள். இது வேலை-ஒருங்கிணைந்த கற்றல் முறையின் மூலம் தொழில்முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இந்த மூன்று திட்டங்களுக்கு மேலாக, NUS நர்சிங் துறை சிங்கப்பூரின் முதல் டாக்டர் ஆஃப் நர்சிங் பயிற்சி திட்டத்தையும் அறிவித்துள்ளது.இது தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டங்கள் NUS நர்சிங் துறையின் 20 ஆண்டுகால பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.2005-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இதையுறை, தற்போது 2025 QS உலக தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது.
இன்றுவரை 3,500-க்கும் மேற்பட்ட நர்சிங் நிபுணர்களை உருவாக்கி,சிங்கப்பூரின் பல்வேறு சுகாதார அமைப்புகளுக்கு சேவை செய்து வருகிறது.