இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!!

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் - பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!!

வடக்கு – கிழக்கு ரயில் பாதை பணிமனையின் மின்சார விநியோக நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் ரயில் எல்ஆர்டி சேவைகள் தடைபட்டதாக எஸ்பிஎஸ் ட்ரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜஃப்ரி சிம் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) ஏறத்தாழ 10 மணி நேரத்துக்கு மின்தடைப்பட்டது. இந்த தகவலை SMRT நிறுவனம் காலை 5:30 மணி அளவில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பாதை மற்றும் செங்காங் – பெங்கோல் அமைப்பு பகிர்ந்து கொள்ளும் துணை மின் நிலையத்தின் மின்விநியோக வாரியத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் மின்சாரம் செயலிழந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக வடகிழக்கு பாதையில் உள்ள 11 MRT நிலையங்களிலும் முழு இலகு ரயில் பாதையிலும் நேற்று ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இன்று புதன்கிழமை ஆனால் ஆகஸ்ட் 13ஆம் தேதி செங்காங்- பெங்கோல் எல்ஆர்டி சேவை காலை வழக்கு நிலைக்கு திரும்பியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று மின்தடை ஏற்பட்ட காரணத்திற்காக புதன்கிழமை அதிகாலை 5:30 மணி அளவில் எஸ்பிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பதிவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இன்று சரியாக பிற்பகல் 3:34 மணியளவில் செங்கோல் எல்ஆர்டி சேவை வழக்க நிலைக்கு திரும்பியது. மாலை 4:04 மணி அளவில் பெங்கோல் எல்ஆர்டி சேவை வழக்கு நிலைக்கு திரும்பும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan