சாங்கி விமான நிலையம் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு அருகே மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில், 34 வயது பெண் பயணி ஒருவரும் ஒரு வயது சிறுவனும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று (16.11.25) இரவு 8:20 மணிக்கு நகரத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஏர்போர்ட் பவுல்வர்டில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டதாகவும், 34 வயதுடைய ஒரு பெண் பயணியும் ஒரு வயது சிறுவனும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.