சிங்கப்பூர் பாதுகாப்புத் துறையின் சைபர் பயிற்சியில் AI இணைப்பு..!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல், பாதுகாப்புத் துறை மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு திறமை மேம்பாட்டுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இணைக்க உள்ளது.
இது சைபர் உலகின் மாறிவரும் சூழ்நிலைகளையும், அடுத்த தலைமுறையை AI திறன்களுடன் உருவாக்குவதின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வயதுடைய சுமார் 800 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இதில் ஆன்லைன் தடயவியல்,வலை நிரலாக்கம் போன்ற பாடநெறிகள் அடங்கும்.
நாட்டிற்கும் உலகிற்கும் எதிர்நிலையிலுள்ள பல்வேறு சைபர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில்,எதிர்காலத்தில் இம்மாணவர்கள் ஒன்றிணைந்து பங்களிப்பார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.