சிங்கப்பூரில் : வெளிநாட்டு பெண் ஒருவர் கைது!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் : வெளிநாட்டு பெண் ஒருவர் கைது!! காரணம் என்ன??

வெளிநாட்டு பெண்(70 வயது) ஒருவர் சிங்கப்பூரில் கைதாகி உள்ளார்.

அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள் மாறாட்டம் செய்து பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்ட இவர் மலேசியாவை சேர்ந்தவர் ஆவார்.

(HKMA) ஹாங்காங் நாணய ஆணையத்தின் பணியாளர்களை போல ஆள் மாறாட்டம் செய்து குறைந்தது 3 பண மோசடிகளில் இவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவல் துறையின் விசாரணையில் , இவர் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கு பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் , வங்கி கணக்கின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாகவும் கூறி அவர்களிடம் அதை சரி செய்ய குறிப்பிட்ட தொகையை தரக்கோரி உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உண்மையென கருதி இவர்கள் கேட்ட தொகையை அவர்கள் சொல்லும் நபர்களிடம் ஒப்படைத்தும் உள்ளனர்.

பிறகு அவர்களை தொடர்பு கொள்ள நினைக்கும் போதுதான் இவர்கள் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளனர்.

கடந்த 24 ம் தேதி தங்க வியாபாரி புல்லியன்ஸ்டார் கொடுத்த தகவலின் பேரில் இப்பெண்மணி கைதாகியுள்ளார்.

இப்படி பல்வேறு குற்றங்களை செய்து அதில் கிடைக்கும் பணத்தையும் தங்க கட்டிகளையும் குற்றவியல் குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் முகம் தெரியாத நபர்களுக்கு மாற்றுவதன் மூலம் மோசடி கும்பலுக்கு இப்பெண் உதவியது அம்பலமாகியுள்ளது.

மேலும் இவரிடம் இருந்து $200 பணமும் 200,000 மதிப்புடைய தங்க கட்டிகளையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் சிங்கப்பூர் காவல் துறையினர் பொதுமக்களை சற்று விழிப்போடு இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK