இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!!

இலங்கையில் "தித்வா" புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!!

இலங்கை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது இந்த வங்கக்கடலில் உருவான தித்வா புயல்.

நாட்டின் பெரும் பகுதியை சேதப்படுத்திய இந்த புயலினுடைய கூற தாண்டவம் பெரும் பகுதியில் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக இலங்கையை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக மிகவும் தீவிரம் அடைந்து புயலாக மாறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் மாத இறுதியில் இலங்கையை நோக்கி இந்த புயலானது வலுவடைந்து நகர்ந்ததால் அங்குள்ள பல பகுதிகளில் இதுவரை வரலாற்றில் காணாத அளவு கனமழையானது பெய்துள்ளது.

இந்த கன மழையில் நாட்டின் பல முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் நீரானது பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் முக்கியமாக கெழனி என்ற ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணத்தினால் கொழும்புவின் வடக்கு பகுதி முழுவதுமாக வெள்ளை நீரால் சூழப்பட்டிருந்தது.

தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையுள்ள பல நகரங்களில் வெள்ள நீர் மூழ்கி இன்னொரு புறம் நிலச்சரிவுகள் மற்றும் மேலும் அதிக பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை சமாளிப்பதற்காக இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அந்த நாட்டினுடைய அதிபரான குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இந்த வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 300-ஐ கடந்துள்ளது. 400க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்சாரம், குடிநீர் வசதி, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு சேவைகள் அனைத்தும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆபரேஷன் “சாகர் பந்து” என்ற பெயரில் நிவாரண பணிகள் மேற்கொண்டு வருவதாக சேட்டக் ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த சுமார் 300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை இந்திய விமான படையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இந்தியர்களை திருவனந்தபுரம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மெல்ல மெல்ல தற்பொழுது மீண்டும் வந்த இலங்கையில் இந்த புயல் ஏற்படுத்திய மிகப்பெரும் சேதம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK