ஆஸ்திரேலியா சந்தையில் நுழையும் சிங்கப்பூரின் இ-வாலட் நிறுவனம்..!!!

ஆஸ்திரேலியா சந்தையில் நுழையும் சிங்கப்பூரின் இ-வாலட் நிறுவனம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இ-வாலட் நிறுவனமான Youtrip, ஆஸ்திரேலிய சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது. இது COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு நிறுவனத்தின் முதல் சர்வதேச விரிவாக்கமாகும்.

Youtrip தற்போது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் பல நாணய ரீசார்ஜ் கார்டுகளை வழங்கி வருகிறது.ஆண்டுதோறும் US$15 பில்லியனுக்கும(S$19.5 பில்லியன்) அதிகமான பரிவர்த்தனைகள் நிறுவனத்தின் தளத்தின் மூலம் செயலாக்கப்படுவதாக Youtrip தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்துள்ளதால், போட்டித்தன்மை வாய்ந்த அந்நியச் செலாவணி விகிதங்களுக்கான தேவை உயர்ந்திருப்பது,youtrip சந்தையை ஒரு முக்கிய இலக்காக மாற்றியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 12.3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர்.அவர்கள் மொத்தமாக AUD 50 பில்லியனுக்கும் (அமெரிக்க டாலர் 32.74 பில்லியன்) மேல் செலவிட்டுள்ளனர்.

மேலும், தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய சந்தை விரிவாக்க நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக நிறுவனம் 110 மில்லியன் டாலர்களுக்கு (S$143 மில்லியன்) மேல் நிதி திரட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK