ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!!

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்...!!

சிங்கப்பூர் – ஜோகூர் பாரு இரு வழிகளிலும் ரயில் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு சுலபமாகும் வண்ணம் ஒரு புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் பெயர் Cross Border Railways Bill என அழைக்கப்படும்.

சிங்கப்பூரையும் ஜோகூர் பார்வையும் இணைக்கின்ற புதிய RTS விரைவு ரயில் சேவைக்க மசோதா ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் ரயில் நிலையத்தையும் இணைத்தும் புதிய ரயில் சேவை வருகிறது. இதற்கான பயண நைட்டிப்பு நேரமானது 5 நிமிடம் மட்டுமே இருக்கும்.

இந்த சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மசூதாவில் சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பாரு இடையே இரு வழிகளிலும் குடிநுழைவு நடைமுறையை செய்வதற்கு பதிலாக புறப்படும் இடத்தில் மட்டும் இந்த சேவை தொடரப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்துவதற்கு உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் பணிபுரிவதற்கு மலேசிய குடிநுழைவு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மலேசியா அதிகாரிகள் சிங்கப்பூரில் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்பதை மசோதா வலியுறுத்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக சிங்கப்பூரில் யாரையும் கைது செய்ய மலேசியா அதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயிலில் நடக்கும் சம்பவங்களை கையாள்வது, பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது போன்ற அவற்றைப் பற்றி மசோதாவில் கூடுதல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் சுங்கச்சாவடிகள், குடிநுழைவுச் சட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK