சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம் !!! காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!!
சிங்கப்பூர் : ஹௌகாங்கில் உள்ள ஒரு HDB கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள காபி கடையில் இன்று (மே 5) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சேனல் என்ற சமூக ஊடக பக்கம் பேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளது. அதில் தீப்பிடித்த காபி கடைக்கு மேலே உள்ள 3 மாடிகளில் இருந்த 12 HDB குடியிருப்புகளின் வெளிப்புற சுவர்கள் இந்த விபத்தால் கருகிப் போய் இருப்பது தெரிகிறது.
விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) இன்று (மே 5) அதிகாலை 4:50 மணி அளவில் ஹெளகாங் அவென்யூ1, பிளாக் 106 -ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தது அடுத்து SCDF வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு வந்தபோது, காபி கடையில் உள்ள பல கடைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இந்த விபத்தால் காபி கடையில் இருந்து 40 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை என தெரிவித்துள்ளனர்.
தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் 2 தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் 5 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்த காரணம் காவல்துறையின் விசாரணையில் உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த இடத்தின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக டிஏபி பாயா லெபார் கிளைத் தலைவரான லியு கெ யுவான் சம்பவ இடத்திற்கு வந்த பார்வையிட்டு உள்ளார்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பெரிய உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என SCDF வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகும் அவர்கள் கூறியுள்ளனர்.