அங் மோ கியோவில் S$92 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட பள்ளி..!! யாருக்குத் தெரியுமா..??

அங் மோ கியோவில் S$92 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட பள்ளி..!! யாருக்குத் தெரியுமா..??

சிங்கப்பூர் சிங்கப்பூரில் சமூக சேவை அமைப்பான APSN (Association for Persons with Special Needs) சார்பில் செயல்படும் சாயோயாங் மற்றும் டோங்லிங் பள்ளிகளுக்கான புதிய வளாகங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளன.

அங் மோ கியோ தெரு 54 இல் அமைந்துள்ள புதிய வளாகம், சுமார் S$92 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது. 7 முதல் 16 வயதிலான குறைந்த அறிவுசார் குறைபாடுகள் உள்ள 750 மாணவர்கள் ஒரே அமைப்பின் கீழ் படிக்கும் வசதி பெறவுள்ளனர். இது சாயோயாங் தொடக்கப் பள்ளியிலிருந்து டோங்லிங் பள்ளிக்கு தடையற்ற மாற்றத்தை எளிதாக்கும்.

புதிய வளாகத்தை நோக்கி நடைபெற்ற “மாற்றத்தின் நடைபயணம்” நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.கல்வி அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் டாக்டர் சையத் ஹருன் அல்ஹாப்சி மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஏழு மாடிகள் கொண்ட புதிய வளாகம் சுமார் 22,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரு பள்ளிகளுக்கும் தனிப்பட்ட வகுப்பறைகள்,சமையலறைகள், மற்றும் பகிரப்பட்ட ஆடிட்டோரியம், விளையாட்டு மைதானம், மற்றும் பல்நோக்கு சாப்பாட்டு மண்டபம் உள்ளன. டோங்லிங் பள்ளியில் தொழிற்கல்வி பயிற்சிக்காக உட்புற பண்ணை மற்றும் துணிக்கடை வசதிகளும் உள்ளன.


“தோட்டத்தில் பள்ளி” என்ற வடிவமைப்புக் கருத்தில் உருவாக்கப்பட்ட வளாகம் பசுமையாகவும் இயற்கைச் சூழலுடனும் இணைந்து உள்ளது. இது சுமார் 40% பகுதி தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.இது மாணவர்களுக்கு இயற்கையுடன் இணையும் வாய்ப்பையும் தோட்டக்கலை திறன்களையும் வளர்க்க உதவும்.

இரு பள்ளிகளும் புதிய வளாகத்தில் இணைந்த பிறகும் தனித்துவமான நிர்வாக அமைப்பைத் தொடர்ந்து பராமரிக்கும்.

ஆசிரியர்-மாணவர் விகிதம் கல்வி அமைச்சின் விதிமுறைகளுக்கு இணங்க இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK