SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..??
சிங்கப்பூர்: SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உள்ளூர் சமூக சேவை அமைப்பாளர் ரெயின்போ சென்டர் SMRT உடன் இணைந்து, அவர்களின் புரிதலுக்காக குரல் எழுப்பி சுரங்கப்பாதை நிலையத்தில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இன்று முதல் (ஏப்ரல் 10) ஏப்ரல் 12ஆம் தேதி வரை கரிஃபின் அறிவிப்பு தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 11 மணி வரை MRT நிலையங்களில் ஒளிபரப்பப்படும். இது பயணிகள் ஒருவன் போல மரியாதையாக நடந்து கொள்வதற்காகவும் அவர்களின் பயணங்களை மென்மேலும் இனிமையாக்குவதற்கும் ஒரு நினைவூட்டியாக இருக்கும்.
ரெயின்போ சென்டர் யிஷூன் பார்க் பள்ளியின் மாணவரான கரிஃப், SMRT – க்காக ஒரு அறிவிப்பை பதிவு செய்யும் காணொளியினை ரெயின்போ சென்டர் அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது
SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து உருவாக்கிய இந்த கற்றல் இடமானது மைல்ஸ் பார்க் குறித்த கர்ரிஃபின் கண்ணோட்டமும் இந்த காணொளியில் இடம்பெற்று இருக்கிறது. இது மாணவர்கள் தங்கள் EZ-Link அட்டைகளை டாப்அப் செய்வது, பொது போக்குவரத்தை பாதுகாப்பிற்காக பயன்படுத்துவது மற்றும் சுதந்திரமான பயணத்திற்கான நம்பிக்கையை வளர்க்கும் விதமாக இந்த அத்தியாவசிய பயண திறன்கள் உதவும்.