தளவாடத் துறையில் பாதுகாப்பு புரட்சி..!! வாகனப் பாதுகாப்பில் புதிய தரநிலை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கனரக வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சக்கர நட்டுகளில் குறிகாட்டி அமைப்புகள் நிறுவப்படுவது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கும்.
சக்கர நட்டுகள் தளர்ந்தால், குறிகாட்டிகள் உடனடியாக எச்சரிக்கை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சட்டம் மற்றும் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் முர்ரே தெரிவித்துள்ளார். இத்தகைய அமைப்புகள் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை உறுதி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், கனரக லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் காவல் துறையுடன் இணைந்து LTA பணியாற்றி வருகிறது.இந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு LTA குறுஞ்செய்தி மற்றும் ஆய்வு அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து நினைவூட்டல் அனுப்பும்.
உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) உதவுவதற்காக, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மார்ச் 2027 வரை உற்பத்தித்திறன் மேம்பாட்டு மானியத்தை வழங்கும்.
பொதுப் பேருந்து பாதுகாப்புக்கான முத்தரப்பு பணிக்குழுவின் பரிந்துரைகள் சில தனியார் பேருந்து சங்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பங்குதாரர்களும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்வது முக்கியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.