ஏமஸ் யீ-க்கு பிணையில் விடுவிக்க அனுமதி..!!

ஏமஸ் யீ-க்கு பிணையில் விடுவிக்க அனுமதி..!!

சிங்கப்பூர்: 27 வயதான ஏமஸ் யீ பெங்ஷான், தேசிய சேவை தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட காரணத்திற்காகவும் பாலியல் குற்றங்களுக்காகவும் அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். அதன் பிறகு, மார்ச் 20 ஆம் தேதி அன்று சாங்கி விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் மத்திய மனிதவள பணியகத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏப்ரல் 26, 2016 முதல் மார்ச் 19, 2026 வரை 9 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய சேவை கட்டாய ராணுவ சேவை சட்டத்தின்படி இவர் பணிக்கு செல்ல தவறியதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல தவறிய காரணத்திற்காகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 13, 2015 மற்றும் ஏப்ரல் 19, 2016 ஆகிய தேதிகளுக்கு இடையில் டிசம்பர் 15, 2016 மற்றும் மார்ச் 19, 2026 ஆகிய தேதிகளுக்கு இடையிலும் செல்லுபடியாக வெளியேறும் அனுமதிச்சீட்டு இல்லாமல் இவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறியுள்ளார் இந்த குற்றத்திற்காகவும் யீ பெங்ஷான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யீ பெங்ஷான் மீது சுமத்தப்பட்ட வழக்கானது இன்று (மார்ச் 26 ஆம் தேதி) மாநில நீதிமன்றங்களில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் வெள்ளை சட்டை அணிந்து இருந்தார். மேலும் நீண்ட முடியுடன் காணப்பட்டார். இவர் காணொளி காட்சியின் மூலமாக இந்த விசாரணையில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மத்திய மனிதவள பணியகம் தனது முதற்கட்ட விசாரணையை முடித்து விட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் அவரை தொடர்பு கொள்வதை உறுதி செய்வது மற்றும் அவர் இந்த வழக்கு குறித்த சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட கூடாது என்பதற்கு உள்ளிட்ட சில நிபந்தனைகள் உட்படுத்தப்பட்டு அவரை பிணையில் விடுவிப்பதற்கு தனது தரப்பில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என அரசு தரப்பு கூறியுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட யீ பெங்ஷான் தன்னை யாராவது ஜாமீனில் விடுவிக்க முடியுமா எனக் கேட்டபோது, குற்றத்தை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கிறீர்களா என நீதிபதியின் கேட்டார். இது குறித்த குற்றம் சுமத்தப்பட்ட யீ பெங்ஷான் இதைப் பற்றி யோசிக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

இறுதியாக நீதிபதி ஜாமீனில் வெளிவர ஒருவரை கண்டுபிடிப்பதற்காக அவர் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு ஜாமின் தொகையை $10,000 வழங்க வேண்டும் என நிர்ணயித்தார்.

குற்றவாளியின் தாய்விசாரணையில் கலந்து கொண்டு காணொளி மூலமாக தன் மகனை பார்த்தார். அவரிடம் பிணைத்தொகை வழங்க விருப்பமுள்ள தான் என கேட்டபோது என் மகனுக்காக ஜாமீன் தொகையை வழங்குகிறேன் என கூறினார். ஆனால் என் மகனுக்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

யீ பெங்ஷான் மீதான வழக்கு தொடர்புடைய விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டமானது ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK