சிங்கப்பூர்: ஹௌகாங் பகுதியில் உள்ள ஒரு களிமண் பானை உணவகத்தில் பரிமாறப்பட்ட மூலிகை சிக்கன் சூப்பில் புழுக்கள் இருந்ததாக ஒரு இணையவாசி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@leoxkennedy என்ற டிக்டொக் பயனர், சம்பவம் குறித்து மூன்று நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் உணவகத்தில் உணவருந்தும்போது, மேஜையில் உள்ள இரண்டு சூப் கிண்ணங்களில் ஒன்றில் ஆறு வெண்மையான பூச்சிகள் இருந்தது தெரியவந்ததாக கூறினார். இந்தக் காட்சிகள் வீடியோவிலும் தெளிவாக பதிவாகியிருந்தது.
இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில், அவர் சம்பவத்தை உணவகத்திற்கு தெரிவித்துள்ளதாகவும், அதன் பின்னர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
8World News செய்தி நிறுவனம் தொடர்புகொண்டபோது, உணவு நிறுவனம் மற்றும் அதிகாரிகள் இணைந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்தனர். “உணவுப் பாதுகாப்பு என்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பு” எனவும், உணவகங்கள் நல்ல சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.