மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!
மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.
டிஎம்-இன் அமெரிக்கக் கிளையில் முன்னாள் நிர்வாகிகளாக இருந்த முகமது ஹபீஸ் லாக்மேன், முகமது யூசைமி யூசோஃப், கான் துவாங் நுயென் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான பல்வேறு காலகட்டங்களில் தவறான அறிக்கைகள் மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிறுவனத்தில் இருந்து நிதிகளை திருடியுள்ளார்கள்.
தன் மூலம் அமெரிக்காவில் உள்ள எதிர் தரப்பினர், விநியோகிப்பாளர்கள், தணிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரை ஏமாற்றியதாக குற்றசாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 நபரும் தங்களின் சொந்த நிதி ஆதாயத்திற்காக நிறுவனப் பதிவுகளை போலியாக மாற்றியுள்ளனர். ஒரு திட்டமிட்ட மற்றும் கணக்கிடப்பட்ட நிதி மோசடி திட்டத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் பொறுப்பு உதவி இயக்குநரான ஜேம்ஸ் சி.பார்னக்கிள் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
முகமது ஹபீஸ், பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 நபர்களும் ஏப்ரல் மாதம் அதிகாரிகளிடம் தானாகவே சரணடைந்துள்ளனர். அந்த மூவரும் மின்னணுவியல் தொலைத்தொடர்பு மூலம் மோசடி, மோசமான அடையாளத் திரட்ட ஆகிய குற்றச்சாட்டுங்கள் சுமத்தப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.
முகமது ஹபீஸ், முகம்மது யுசைமி, நுயென் ஆகியவரைக் கருத்து கேட்பதற்காக உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. கருத்து கேட்பதற்கான கோரிக்கைக்கு டி.எம். நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவும் இல்லை.
டிஎம் நிறுவனம் தனது குற்ற செயல்களைத் தானே முன்வந்து தெரிவித்ததாலும், அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாக உறுதி அளித்ததாலும் அந்நிறுவத்தின் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அமெரிக்க நீதித்துறை மறுத்துவிட்டது.
குறைக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் பிற சலுகைகளுக்கு பதிலாக நிறுவனங்கள் குற்ற செயல்களைப் புகார் அளிக்க ஊக்குவிக்கும் ஒரு கொள்கையை அமெரிக்க நீதித்துறை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.