சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!!
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் மே 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தானது அண்மை காலங்களில் சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மே மாதம் 22ஆம் தேதி ஷான்சி மாநிலத்தில் உள்ள லியு ஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் இரவு 7:29 மணி அளவில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனையெடுத்து நிலக்கரி சுரங்கத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறை அதிகாரிகளை தடுத்து வைத்துள்ளனர். சம்பவம் நடந்தபோது நிலத்தடி சுரங்கத்தில் மொத்தம் 247 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் 21 பேர் காலை 6 மணி அளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சுரங்கத்தில் 9 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்தில் தூக்குப் படுக்கைகளைச் சுமந்து செல்வதையும், ஆம்புலன்ஸ் அருகே நிற்பதையும் சம்பவம் குறித்து பரவி வரும் காணொளிகளில் காண முடிகிறது.
சீன அதிபர் ஸி ஜின்பிங், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையை அதிகாரிகள் மேற்கொள்ளும்படியும் உத்தரவிட்டு உள்ளார்.
நிலக்கரிச் சுரங்கத்தில் வெளியான கரிம வாய்வின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்ததால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட பலர் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் செய்தி கிடைத்துள்ளது.