இந்த குறும்படம் ஏன் 1.2 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது தெரியுமா..?

இந்த குறும்படம் ஏன் 1.2 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது தெரியுமா..?

சிங்கப்பூர்: பொது மக்களுக்கு வீக் எண்டு வந்து விட்டாலே எந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று ஆவல் இருக்கும். அது திரைப்படமோ அல்லது குறும்படமோ எதுவாக இருந்தாலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப இருந்தால் அதற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.அதேபோல இந்த தொகுப்பில் சிங்கப்பூரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு குறும்படத்தை பற்றி பார்க்கலாம்..

சிங்கப்பூரில் “நமது சிங்கப்பூர், நமது கதை” என்ற குறும்படத் திட்டம் எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமான பிரதிபலிப்பை பெற்றுள்ளது.மொத்தம் 100க்கும் மேற்பட்ட குறும்பட யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 30 ஏற்றுக்கொள்ளப்பட்டு, சமூக ஊடகங்களில் 150க்கும் மேற்பட்ட படைப்புகள் வெளியாகி, 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆதரித்த இந்த முயற்சி ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. 450க்கும் மேற்பட்ட மூத்த மற்றும் வளர்ந்து வரும் திரைப்படத் துறை நிபுணர்களை ஒன்றிணைத்த இந்தத் திட்டம், அடுத்த தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களை வளர்ப்பதற்கான தளமாக விளங்குகிறது.

திரைக்கதை எழுத்தாளரும் நடிகையுமான லி வென் கூறியதாவது, “இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது அனைவரையும் ஒன்றிணைக்கிறது. அனிமேஷன், விளம்பரம் அல்லது போஸ்ட் புரொடக்‌ஷன் துறையில் இருப்பவர்களாக இருந்தாலும், அற்புதமான படைப்புகளை உருவாக்க நாங்கள் ஒன்றாக பணிபுரிந்தோம்” என்று கூறினார்.

சில குறும்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. பல்வேறு மொழிகள், இனங்கள் மற்றும் வகைகளை உள்ளடக்கிய இந்தக் கதைகள் சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் சுயாதீன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவன் கூறியதாவது, “இந்தக் கதைகளில் சில சர்வதேச அளவில் முன்னேறும் திறன் கொண்டவை. அடுத்த கட்டம் ‘2.0 பதிப்பு’ மூலம், பிராந்திய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராய உள்ளோம்.”

அடுத்த கட்டங்களில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இணையும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK