சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!!
சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) சுற்றறிக்கை ஒன்றில் 350 – க்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளன. இதற்காக LTA மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் தொடர்பாக மே 4- ஆம் தேதி என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்று இருந்தது.
மின்சார வாகன மின்னேற்றங்களை வாங்க விரும்பும் உரிமையாளர்களுக்கு அதனை பதிவு செய்யும் ஒன்மோட்டரிங் தளத்தின் புதிய மின் விளக்கு சேவை குறித்து தெரிவிப்பதற்கான சுற்றறிக்கை தான் அது.
ஆணையத்தின் தேசிய மின்சார வாகன மையம் அந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதனை அனுப்ப மின்னஞ்சல் முகவரி பகுதிகள் மறைமுக நகல் பிரிவை தேர்ந்தெடுப்பதற்கு பதில் அசல் நகல்களை தேர்ந்தெடுத்ததால் இவ்வாறு நடந்துள்ளது.
அவ்வாறு செய்ததால் அசல் நகலில் இடம் பெற்ற அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் இடம்பெற்று இருந்தது.
அதனை அறிந்து கொண்ட LTA மின்னஞ்சல் முகவரிகளை வெளிப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு மே 4- ஆம் தேதி அன்று இரவு 10:44 மணியளவில் மற்றொரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது.
இந்த கவனக்குறைவிற்காக இது சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தேசிய மின்சார வாகன மையத்தின் மின்வாகன ஒழுங்குமுறை துணை இயக்குனரான லிம் யோங் சியான் அவர்கள் தெரிவித்துள்ளார்.