பரபரப்பு..!! சிங்கப்பூர் கல்லூரிகளில் நடந்த திடீர் ரெய்டு..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் கல்வி அமைச்சகம் இணைந்து இரண்டு மாதங்களில் 12 உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், மின்-சிகரெட் (e-cigarette) தொடர்பான குற்றங்களுக்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 19 மின்-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
HSA வெளியிட்ட கூட்டு அறிக்கையில், செப்டம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை HSA அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்புப் பணியாளர்களும் இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.
குற்றவாளிகள் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், தங்களது ஒழுங்குமுறை விதிமுறைகளின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளன.
எடுத்துக்காட்டாக, செப்டம்பரில் வளாகத்தில் மின்-சிகரெட் வைத்திருந்த 24 வயது நபருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன், அவர் கட்டாய ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதேவேளை, உயர்கல்வி நிறுவனங்கள் மின்-சிகரெட்டுகளை எதிர்த்து விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.
மாணவர்களுக்கு இத்தகைய பழக்கம் சட்டவிரோதமானதும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் வழிகாட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.