தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF முன்னெச்சரிக்கை காரணமாக குடியிருப்பில் வசித்த சுமார் 80 குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
சியாவோஹாங்ஷூவல் இந்த விபத்து குறித்தக் காணொளியை இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு உயரமான அடுக்குமாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் சில குடியிருப்பார்கள் நின்று கொண்டிருப்பதும், அதில் இருந்து அடர்த்தியான கருப்புப் புகை வெளியேறுவதும் தெரிகிறது.
மேலும் இணையப் பயனர் ஒருவர் விபத்து குறித்து கூறியதாவது: காலை 8:15 மணி அளவில் சைரன் ஒலி கேட்டதாகவும், சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் குடியிருப்பிற்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கீழே வந்தபோது ஜன்னலிலிருந்து மிகவும் அடர்த்தியான கருப்பு புகை வெளியேறியதை கண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 8:30 மணி அளவில் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்க்க தீயணைப்பு வீரர்கள் கீழே வந்ததாகவும், அதற்கு முன்பாக அடர்த்தியான புகை நின்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிமைப் பாதுகாப்புப் படை இந்த சம்பவத்தை கூறுதி செய்து 9-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பின் வரவேற்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
SCDF படையினர் குழாய்கள் மற்றும் அழுத்தப்பட்ட காற்று நுரைப் பைகளைப் பயன்படுத்தி தீயை அனைத்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பில் இருந்து 2 குடியிருப்பாளர்களை மீட்டுள்ளனர்.
காயமடைந்த அந்த 2 குடியிருப்பாளர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்த பொழுது அவர்கள் இருவரும் மறுத்து விட்டதாக SCDF கூறியுள்ளது.