சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி..!!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி..!!! நடந்தது என்ன..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்த “இராணுவ முகாம் பிரதிநிதி” மோசடிகள் தொடர்பாக, ஒரு கேட்டரிங் நிறுவன உரிமையாளர் தானும் இவ்வாறான வலையில் சிக்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஹொங்யு கிச்சன் பொறுப்பாளர் லி ஹுய், இந்த ஆண்டு ஜனவரியில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர், தான் “இராணுவ முகாமின் பிரதிநிதி” என்று கூறியுள்ளார்.அவர் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து, தலா 40 உணவுப்பெட்டிகள் என இரு வேளை உணவை ஆர்டர் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர் போல நடித்த அந்த நபர், “உணவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை” என்றும், “டெபாசிட் வேண்டாம், முழுத் தொகையையும் செலுத்த முடியும்” என்றும் தெரிவித்தார். ஆனால், உணவு வழங்கும் வடிவம், MRE (Meals Ready to Eat) ரெடி-டு-ஈட் பொட்டலங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, ​​ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை.


மேலும், மற்ற தரப்பினர் பணம் செலுத்துவதை தொடர்ந்து ஒத்திவைத்ததால் சந்தேகமடைந்து,லி ஹுய் இறுதியில் ஆர்டரை ரத்து செய்தார். இதனால் அவர் பலியாகவில்லை. காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றாலும், தன் அனுபவத்தை மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யப் பகிர்ந்ததாகவும் கூறினார்.

“பல வணிகங்கள் ஏமாந்ததை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.மீண்டும் யாரும் இது போன்ற வலையில் சிக்காதபடி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”, என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan