எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!!

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!!

சிங்கப்பூர் : அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் மக்களின் செயல்பாட்டுச் செலவின் அழுத்தங்களைக் குறைக்கும் வகையில், போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற போக்குவரத்துச் சேவைகளை உறுதி செய்வதற்காகவும் இந்த மானியங்களை அரசு அறிவித்துள்ளது.

இந்த அரசு மானியங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை சம்மந்தப்பட்ட போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கல்வி அமைச்சகம், சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு அமைச்சகம் ஆகியவை இணைந்து இன்று (ஏப்ரல் 9) ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மானியங்களைப் பெற இருக்கும் போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடரத் தற்காலிக உதவியை அரசாங்கம் வழங்க முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மூன்று அமைச்சகங்களும் போக்குவரத்து வருவாயில் 13% சமமான மானியங்களைப் போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

எரிபொருள் விலைகளால் ஏற்படும் கூடுதல் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவும், இந்த மூன்று மாதங்களில் நிலையான கட்டணங்களைப் பராமரிக்கவும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எரிபொருள்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்தால், எதிர்காலத்தில் கட்டணங்கள் அதிகரிக்க கூடும். தற்போது தேவைப்படும் மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்துச் செலவுகளை சமாளிக்க உதவும் வகையில் அரசாங்கம் பல மானியங்களைக் கொண்டுள்ளது.

இந்த திட்டமானது ஜூலை மாதத்தில், விரிவுபடுத்தப்பட்டு, மானியத் தொகை அதிகரிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் அறிவித்தனர். எஸ்ஜி எனேபிள் (சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் மன்றம்) பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இதைத் தொடர உள்ளது.

நீண்ட காலப் பராமரிப்பு மற்றும் சமூக டயாலிசிஸ் சேவை நிறுவனங்களைப் பொறுத்தவரை, நோயாளிகளுக்கு போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் .

பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக டயாலிசிஸ் மையங்களுக்கு சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சகம் உதவி வழங்கும்.

அதிகாரிகளும், சிங்கப்பூர் மருத்துவச் சேவைகள் கூட்டமைப்பும் (SFMS) இந்த மாத இறுதிக்குள் இந்த புதிய திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட வாய்ப்புள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK