சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
சிங்கப்பூரில் 19 வயது பெண்ணை நீண்ட நாட்களாக துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 66 வயது முதியவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று(மே 25) 14 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறை தண்டனையை விதித்துள்ளது.
66 வயதான லிம் பெங் தியோங் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹீவாங் பாயிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பல மாத பல மாத கால கொடுமைகளில் தானும் பங்கேற்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள லிம் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட சிறுமி குடி பெயர்ந்ததற்குப் பிறகு அந்த சிறுமியின் எடை 48.8 கிலோவில் இருந்து 27.6 கிலோவாக குறைந்துள்ளது.
மேலும் அந்த சிறுமி இறுதியில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு மேலும் பல அடிபட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் மேலும் 2 குற்றவாளிகளான இறந்தவரின் 34 வயது சகோதரர் ஹீவாங் போக்கன் மற்றும் 46 வயது சீ மேய் வான் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லிம் கொலைக்கு நிகரான ஒரு குற்றவியல் மனித கொலை குற்றசாட்டை ஒப்பு கொண்டுள்ளார். அதனால் அரசு தரப்பு 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூறியது. குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு 11 ஆண்டுகள் வேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதிட்டது.
நீதிபதி தண்டனை வழங்கும்போது பிரம்படிக்கு மாற்றாக 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் என்று அசல் தண்டனை 6 மாதங்கள் அதிகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் 50 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவர் சட்டப்படி பிரம்படிக்க தகுதியற்றவராக இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட நடத்தை மற்றும் குற்றத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் இந்த வழக்க எனது கொடூரமானது என்பதை நீதிபதி ஒப்புக்கொண்ட போதிலும் குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் அரசு தரப்பு கோரிய அளவிலான தண்டனைக்கு தகுதியானவை அல்ல என்றும் அவர் கருதி உள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லிம் முக்கிய திட்டமிடுபவர் இல்லை என்றாலும் அவர் அந்த துஷ்பிரயோகத்தை தீவிரமாக ஆதரித்துள்ளார். மேலும் அவர் இதில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றுள்ளார்.
அந்த துஷ்பிரயோகம் நீண்ட காலமாக கண்டறியப்படாமல் இருப்பதற்கு உகந்த சூழலை அவர் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் இறந்தவர் நீண்ட காலமாக கொடுமையான மற்றும் அர்த்தமற்ற சித்திரவதை அனுபவித்தார் என்பதையும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்து வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.