SMRT நிறுவனத்தில் ஆள் சேர்ப்பு குறித்த முக்கிய அப்டேட்..!!
ஓட்டுநர்களின் வேலைக்காக புதிதாக பணி அமர்த்தும் நோக்கத்தோடு SMRT நிறுவனம் ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
உள்ளூர் பேருந்து நிறுவனங்கள் உள்ளூரில் வசிப்பவர்களை பேருந்து ஓட்டுனர்களாக பணியில் அமர்த்த தங்களின் ஆள்சேர்ப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்த அப்டேட்டுகளை SMRT சமீபமாக ஆள்சேர்ப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் தனது கையெழுத்து ஊக்கத்தொகையை அதாவது புதிதாக பணியில் அமர்த்தும் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை சற்று அதிகரித்திருக்கிறது.
ஊக்கத்தொகையானது $20,000 இலிருந்து $30,000 என்று உயர்த்தி இருக்கிறது. மேலும் இந்த விளம்பரம் பார்த்து முன்கூட்டியே அப்ளை செய்பவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக $3,000 வழங்கப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.
SBS,Go-Ahead மற்றும் SMRT போன்ற உள்ளூர் பேருந்து நிறுவனங்கள் புதிய ஓட்டுநர்களை சேர்ப்பதற்காக $20,000 வரை புதிதாக பணியில் சேர்ப்பவர்களுக்கு கையெழுத்து ஊக்க தொகைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்கள் புதிதாக சேர்த்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்த முக்கிய அப்டேட்டுகளாக, இன்று (ஏப்ரல் 8) சமூக ஊடகங்களில் SMRT ஒரு புதிய செய்தி வெளியிட்டு இருக்கிறது. கையெழுத்து ஊக்கத்தொகையானது $30,000 இன்று நிர்ணயித்து 50% அதிகரித்து இருக்கிறது.
ஆனால் முன்பு போலவே இந்த கையெழுத்து ஊக்கத்தொகையானது, சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் அங்கு குடிமக்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
பணியது சேரும்போது வழங்கப்படும் ஊக்கத்தக்கரிடம் தற்போது வரையறுக்கப்பட்ட காலத்திற்கான கூடுதல் ஊக்கத்தொகை என்றும் புதிதாக SMRT இன் ஆச்சரிப்பு விளம்பரம் மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பணியில் சேர்ந்து வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத்தொகையான $3,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் $4,000 வரையிலான மாதாந்திர சம்பளம் 13 வது மாத ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு இதர சலுகைகள் உட்பட மற்ற ஆள்சேர்ப்பு விவரங்கள் பெரும்பாலும் முன்பு நடந்தது போலவே இருக்கும். ரயில் ஓட்டுநர்கள் ஐந்து அல்லது ஆறு நாள் வேலைவாரத்தை தேர்வு செய்யலாம் மேலும் பகுதி நேரம் மற்றும் முழு நேர வேலை நேரங்களும் கிடைக்கின்றன.