சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் மின்சாரத் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூர் எரிசக்தி ஆணையம் (EMA) ஒரு புதிய திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஹைட்ரஜன் வாயுவை கையாளக்கூடிய கூடுதலான இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி செய்யும் 3 ஆலைகளை கட்டுமாறு EMA எரிசக்தி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மூன்று ஆலைகளில் ஒன்று 2031-க்குள் தயாராகும், மற்ற 2 ஆலைகள் 2032-குள் தயாராகவும் EMA திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் இந்த புதிய ஆலைகள் குறைந்தது 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவில் அமைக்கப்படும் என்று EMA தெரிவித்துள்ளது. 8,64,000 – க்கும் அதிகமான வீடுகளுக்கு ஓராண்டுக்கு தேவையான மின்சாரம் தான் இந்த 600 மெகாவாட் மின்சாரம்.

ஹைட்ரஜன் வாயு வருங்காலத்தில் எளிதில் பயன்படுத்தக்கூடிய நிலை வரும் போது ஆலைகள் கையாளும் இயற்கை எரிவாயில் குறைந்தது 30% அளவு ஹைட்ரஜன் ஆக இருக்க வேண்டும். எரிக்கப்படும்போது ஹைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கரியமில வாயுவை வெளியேற்றாது. அதே வேளையில் ஹைட்ரஜன் ஒரு இயற்கை எரிவாயு புதைபடிம எரிபொருள் ஆகும்.

தொழில்துறை, மின்னிலக்கத்துறை ஆகியவற்றில் மின்சாரத்திற்கான தேவை அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாக EMA தெரிவித்துள்ளது.

இந்த ஆலைகளுக்கான திட்ட முன்மொழிவுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என எரிசக்தி நிறுவனங்களுக்கு EMA அறிவுறுத்தியுள்ளது.

தற்போது உள்ள ஆலைகளுடன் இணைந்து சிங்கப்பூருக்கு ஒரு நிலையான அடிப்படை மின்சார விநியோகத்தை வழங்குவதோடு, தூய்மையான எரிசக்தியை வழங்கவும் இந்த திட்டமானது ஆதரவளிக்கும் என EMA நம்புகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK