சிங்கப்பூர்: இந்த ஆண்டு(2025) மே மாதம் 28ஆம் தேதியில் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த பன்சாலி ஹேமந்த் மகேந்திர குமார் வந்துள்ளார்.
அதன் பின்னர் 8 மணி நேரம் கழித்து ட்ரான்ஸிட்டு பிறகு கடந்த மே மாதம் 29ஆம் தேதி அதிகாலை 1.45 மணி அளவில் சீனாவில் உள்ள கிங்டாவோவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிங்கப்பூரில் 8:00 மணி நேர ட்ரான்ஸிட்டில் இருந்தபோது பன்சாலி என்பவர் சாங்கி ஏர்போர்ட்டில் உள்ள 3 முனையங்களில் இருந்த 2 வெவ்வேறு கடைகளில் உள்ள பொருட்களை திருடியிருக்கிறார்.
திருடிய பொருட்களின் மதிப்பானது 5,136 டாலர் ஆகும். திருடிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பன்சாலி என்பவர் ஜூன் 1ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற போது சிங்கப்பூர் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, 4 வார சிறை தண்டனை பன்சாலிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் திருடிய பொருட்கள் அனைத்தையும் இந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.