சட்டவிரோத எல்லை தாண்டிய பயண சேவைகள் மீது LTA கடும் நடவடிக்கை..!!

சட்டவிரோத எல்லை தாண்டிய பயண சேவைகள் மீது LTA கடும் நடவடிக்கை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஒடுக்க நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

தீவு முழுவதும் சட்டவிரோத சேவைகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 15 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் மற்றும் தேசிய டாக்ஸி சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற தொடர்ச்சியான சோதனைகளில், ஜாலான் அரா, ஜாலான் பஹியா, விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக LTA தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த ஓட்டுநர்கள் எல்லை தாண்டி பயணிகளை அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LTA எச்சரித்ததாவது,சட்டவிரோதமாக எல்லை தாண்டிய போக்குவரத்து சேவைகள் வழங்குவோருக்கு அதிகபட்சம் $3,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

பொதுமக்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கவனித்தால், go.gov.sg/report-illegal-rides என்ற இணைய முகவரியில் புகார் அளிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் தேசிய மேம்பாட்டுக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் கூறுகையில், கடந்த வாரம் மட்டும் பத்து வாகனங்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பயணிகள் சேவைகளை வழங்கியதாக பறிமுதல் செய்யப்பட்டன. உரிமம் இல்லாத ஓட்டுநர்களுக்கு தேவையான காப்பீடு இல்லை, எனவே பயணிகள் தங்கள் பாதுகாப்புக்காக சட்டபூர்வமான, உரிமம் பெற்ற வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK